பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிகவும் பரபரப்பான அதிரடி சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.
இறுதியாக பிக்பாஸ் வீட்டில் இருந்த எட்டு போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் விதத்தில் ஏற்கனவே வெளியேறிய எட்டு போட்டியாளர்களை மீண்டும் உள்ளே களமிறக்கி உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் ஆரம்பிக்கப்பட்டபோது எந்த ஒரு ஆரவாரமும், சுவாரஸ்யமும் இல்லாமல் சென்றாலும் தற்போது பரபரப்பான கட்டத்தில் காணப்படுகின்றது.
d_i_a
இந்த சீசன் முடிவதற்கு இன்னும் பத்து நாட்களே காணப்படும் நிலையில் மீதமுள்ள போட்டியாளர்கள் இறுதிப் பைனலுக்கு செல்வதற்காக தம்மை தயார்படுத்தி வருகின்றனர்.
அதன்படி அருண், ராயன், சௌந்தர்யா, பவித்ரா, விஷால், தீபக்ம் முத்துக்குமரன் மற்றும் ஜாக்குலின் ஆகியோர் வலிமையான போட்டியாளர்களாக எஞ்சி உள்ளனர். இதில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் ராயன் வெற்றி பெற்றதால் அவர் முதலாவதாக பைனலுக்குள் நுழைந்துள்ளார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் மாரத்தான் டாஸ்க் இடம்பெற்று வருகின்றது. இதன் போது போட்டியாளர்கள் சினிமா பிரபலங்களின் கேரக்டரில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில், இந்த டாஸ்க்கில் சௌந்தர்யா கில்லி படத்தில் நடிகை திரிஷா நடித்த தனலட்சுமி கேரக்டரில் ஆடிப்பாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதன் போது சௌந்தர்யாவின் வீடியோ திரிஷா வியந்து பார்த்து லைக் பண்ணியதாக தகவலொன்று வைரலாகி வருகின்றது.
அதாவது சௌந்தர்யாவுக்கு ஆதரவான இன்ஸ்டா பக்கத்தில் சௌந்தர்யாவின் வீடியோவை பார்த்த திரிஷா அந்த வீடியோவுக்கு லைக் பண்ணி குறித்த பேஜ்ஜை ஃபாலோ பண்ணியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனால் சௌந்தர்யாவுக்கு நடிகர் த்ரிஷாவும் சப்போர்ட் பண்ணுவதாக தகவல்கள் வேகமாக பரவி இருந்தன. ஆனாலும் அது த்ரிஷாவின் இன்ஸ்டா பக்கம் இல்லை அவருடைய பேன்ஸ் பேஜ் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் சௌந்தர்யாவுக்கு பிக் பாஸ் அர்ச்சனா, பிரதீப்,ஓவியா என பல பிரபலங்களும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!