• Dec 26 2024

நான் சொல்வதை நம்புங்கள்... லால் சலாம் படம் சூப்பர்... தலைவர் நடிப்பு மிரட்டல் - Vishnu Vishal Viral Tweet

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இந்நிலையில் படம் சூப்பராக இருப்பதாக விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதை பார்த்து ரஜினி ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர்.


கெரியரில் இருந்து குட்டி பிரேக் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கம்பேக் படம் என்றால் அது லால் சலாம் தான். திரும்பி வந்ததும் தான் இயக்கிய படத்தில் அப்பா ரஜினியை நடிக்க வைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறார் ஐஸ்வர்யா. விஷ்ணு விஷால், விக்ராந்த் சந்தோஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக வருகிறார் ரஜினிகாந்த்.


என்ன தான் இருந்தாலும் இது தலைவரின் படம் அல்ல, கவுரவத் தோற்றத்தில் தானே வருகிறார் என கவலைப்பட வேண்டாம். ஒரு மணிநேரம் தலைவரின் ஆட்டத்தை பார்க்கலாம். அதனால் இது ரஜினியின் படம் என்றும் சொல்லலாம்.


இந்நிலையில் தான் லால் சலாம் படம் குறித்து விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார். தான் டப்பிங் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது, "லால் சலாம் டப்பிங் வேலை முடிந்தது. தலைவரின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன். இது சிறப்பான படமாக இருக்கும். என் பேச்சை நம்புங்கள். பிப்ரவரி 9ம் தேதி உங்களை எல்லாம் தியேட்டரில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.


ரொம்ப சந்தோஷம் தலைவரின் நடிப்பை பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம். லால் சலாம் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.கண்டிப்பா பிளாக்பஸ்டர் தான். நாங்களும் படத்தை தியேட்டரில் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம். விக்ராந்த் ப்ரோவுக்கு இந்த படம் பிரேக் கொடுக்கும் என நம்புகிறோம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement