• May 23 2026

எங்க அண்ணன் வர்றாரு.. வழி விடுங்கப்பா.!! கொண்டாட தொடங்கிய த.வெ.க ரசிகர்கள்..

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு முழுவதும் தற்போது சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த முறை திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முக்கிய கட்சிகளும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.


வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றிலும் வெளியாகும் போதெல்லாம், நடிகர் விஜய் தலைமையிலான தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது.

சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கலாய்த்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். மீம்ஸ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை வைரலாகி வருகின்றன. குறிப்பாக, விஜய் தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு செல்வது போன்ற கற்பனை காட்சிகளும், அவர் அடுத்த முதலமைச்சராக இருப்பார் என்ற பதிவுகளும் அதிகம் பரவி வருகின்றன.

மேலும், பல இடங்களில் விஜய் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும், இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement