• Dec 26 2024

க்ரிஷின் பர்த்டேக்கு திடீர் விசிட் அடித்த இருவர்..! உச்சகட்ட அதிர்ச்சியில் ரோகிணி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், கிரிஷை  பார்ப்பதற்காக ரோகினி வருகின்றார். இதன்போது அவருக்கு புதிய ஆடைகளை கொடுக்க கிரிசும்  சந்தோஷத்தில் போட்டுக் கொண்டு வருகின்றார்.

இதை தொடர்ந்து அயலில் இருப்பவர்கள் எல்லோரும் கிரிஷின்  பர்த்டேக்காக வர, ரோகிணி கேக் வெட்டுவதற்காக தயாராகின்றார். இதன் போது கத்தியை எடுக்க உள்ளே செல்லும்போது, அங்கு முத்துவும் மீனாவும் வருகின்றார்கள்.

இதை பார்த்து கிரிஷ் ஷாக்காகி நிற்க, முத்து வந்து அவரைத் தூக்கிக் கொஞ்சுகின்றார். மேலும் வாங்கி வந்த புதிய ஆடைகளை கொடுத்து சரியான டைமுக்கு தான் வந்திருக்கின்றோம் என கேக் வெட்டுவதற்கு தயாராகின்றார்கள்.


ஆனாலும் க்ரிஷ் அம்மா, அத்தை என்று சொல்லிக் கொண்டிருக்க, முத்து உங்க கூட கொஞ்சம் பேசணும் என ரோகிணியின் அம்மாவை வெளியே அழைத்துக் கொண்டு செல்லுகின்றார். அப்போது க்ரிஷின் அத்தை ஏன் வரவில்லை? அவங்களுக்கு போன் போட்டு குடுங்க நான் பேசுகின்றேன் என்று முத்து கேட்டுக்  கொண்டிருக்க, ரோகினியின் அம்மா வேறு வழி இல்லாமல் என்னுடைய மகளின் பிள்ளை தான் கிரிஷ் என உண்மையை சொல்கின்றார்.

மேலும் கடன் பிரச்சனையில் அவளுக்கு சின்ன வயசில்  கல்யாணம் கட்டி வைத்தேன். அதன் பின்பு அவர் இறந்து விட்டார் என்று உண்மையை சொல்ல, ரோகினி இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.

Advertisement

Advertisement