• Dec 26 2024

தனது ஊரை பற்றி சொல்லும் மாமா... குடி போதையில் தள்ளாடும் மனோஜ்... நடக்காமல் போன முத்துவின் பிளான்- Today's episode

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை தொடர் விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன் ஆரம்பமாகி தற்போது பல ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் சிரியலாக மாறியுள்ளது. இந்நிலையில் ரோகிணியின் மாமா என ஒருவரை தற்போது கதையில் கொண்டு வந்திருக்கும் வேளையில் ரோகிணி எப்போது வீட்டில் மாட்டுவா என பலரும் எதிர் பார்க்கும் நாடகமாக உள்ளது.


இன்றைக்கு என்ன நடைபெற போகிறது என பார்ப்போம் வாங்க. முத்து மற்றும் அவரின் நண்பன் பொய்யாக வந்துள்ள மாமா யார் என்று கண்டு பிடிக்க வேண்டும் என கூறுகிறார். மலேஷியா மாமாவுக்கு குடிக்க கொடுத்துவிட்டு கேட்ப்போம் என கூறுகிறார். 


அதன் பிறகு ஊரை சுத்தி காட்ட போறேன் என்று சொல்லி மலேஷிய மாமாவை முத்துவும் அவரது நண்பனும் அழைத்து செல்கின்றனர். ரோகிணி பயத்தில் மனோஜையும் அனுப்பி வைக்கிறார். ஊரை காட்டுகிறேன் என சொல்லி ஓரிரு இடங்களை காட்டி விட்டு அவருக்கு குடிக்க கொடுக்கின்றனர். 


எப்படியாவது உண்மையை வாங்கி விடலாம் என்று முத்து இருக்கும் நிலையில் மனோஜ் அங்கே வந்து குழப்புகிறார் வாங்க மாமா போகலாம் என்று அப்போது மலேஷிய மாமா மனோஜ் வாயில் சரக்கை ஊத்தி விடுகிறார். இதனால் மனோஜ் நிலை தடுமாறி செல்கிறார்.


என் பெயர் என் ஊரு என்று சொல்லி சொல்லி கொண்டே மாமா மயங்கி விடுகிறார். அவரை ஒருவாறு வீட்டுக்கு அழைத்து வரும் வழியில் மனோஜ் மயங்கி போதையில் கிடக்கிறார். அவரையும் தூக்கி கொண்டு வீட்டுக்கு செல்கின்றனர். இனி வீட்டில் என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.  

Advertisement

Advertisement