• Dec 26 2024

கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' தொடர்பில் நாளை எதிர்பாராத சர்ப்ரைஸ்.! இப்படியொரு திட்டம் இருக்கா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் ஆளவந்தான். இந்தப் படத்தில்  கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மேலும், மனிஷா கொய்ராலா, ரவீனா டான்டன், அனு ஹாசன் என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில், கடவுள் பாதி... மிருகம் பாதி... உள்ளே கடவுள் வெளியே மிருகம் விளங்க முடியாத கவிதை நான் எனக் கமலஹாசனின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது. படம் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படத்தில் அதி நவீன டெக்னாலஜியாகக் கருதப்பட்ட motion control camera பயன்படுத்தப்பட்டது. 

இந்தியாவில் இந்த டெக்னாலஜி முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட படம் ஆளவந்தான் படம் தான்.இந்த படம் குறித்து அண்மையில் பேட்டி அளித்திருந்த தயாரிப்பாளர் தாணு இன்றைய தலைமுறையினருக்கு ஆளவந்தான் படம் ஒரு உத்வேகமாக இருக்கும் என்பதற்காக ரீ ரிலீஸ் செய்யும் திட்டம் உள்ளது எனத் தெரிவித்தார்.


அத்துடன், 20 வருடங்களுக்கு முன் வெளியான இந்த படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து டிஜிட்டலில் மீண்டும் ரீரிலிஸ் ஆக இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'ஆளவந்தான்' திரைப்படம் எட்டுத்திக்கும் எதிரொலிக்க டிசம்பர் 8ஆம் திகதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி 'கடவுள் பாதி மிருகம் பாதி' என்ற கவிதை பாடல் நாளை மாலை 5.03 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

20 ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசன் பாடிய இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில் மீண்டும் வித்தியாசமாக வெளிவர இருப்பது கமல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement