• Dec 25 2024

சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் கார்த்தி! வா வாத்தியார் ரிலீஸ் குறித்து அப்டேட்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான மெய்யழகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக உள்ள படம் வா வாத்தியார். இப்படத்தினை இயக்குனர் நலன் குமாரசாமி தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடித்துள்ளார். 


இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். வா வாத்தியார் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருந்தது. 


ஆனால் ஏற்கனவே பொங்கல் ரேஸில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான், ஷங்கரின் பிரம்மாண்ட படமான கேம் சேஞ்சர் போன்ற திரைப்படங்கள் போட்டி போட்டு களமிறங்கி உள்ளன. அதனால் பொங்கல் முடிந்த பின்னர் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விடுமுறையில் வா வாத்தியார் படத்தை சிங்கிளாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம். 






Advertisement

Advertisement