உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘TN 2026’ படம். இந்த படம் தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, இந்த படம் விஜய் கலாய்த்து உருவாக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்தன.
எனினும் அதற்கு பின்பு, 'விஜய் ஒரு சிங்கம். அவரை யாராலும் பழி தீர்க்க முடியாது. இந்த படத்தை முழுமையாக பாருங்கள்' என்று பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினர் தங்களுடைய சார்பில் விளக்கம் கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், நட்டி நட்ராஜ் நடித்துள்ள TN2026 திரைப்படத்தை தமிழக சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படம் தமிழக அரசியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு வெளியிடப்படுவதால் வாக்காளர்களிடையே தவறான கருத்தை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர் வாதிட்டுள்ளார். மேலும் இந்தப் படம் அரசியல் கட்சிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மறுபுறம் படக்குழு தரப்பில், இது முழுக்க முழுக்க கற்பனை கதையாகும் என்றும், எந்த அரசியல் கட்சியையோ அல்லது நபரையோ குறிவைத்து உருவாக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சினிமா வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்து, விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. விரைவில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் TN2026 படத்தின் வெளியீடு தற்காலிகமாக நிலையற்ற நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!