• Dec 26 2024

வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வடைதான் சுடுவார்! போஸ்ட் போட்டு கிண்டலடித்த பிரபலம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி வெளியானது.  இது சூப்பர் ஸ்டாரின் 170 ஆவது திரைப்படமாக காணப்படுகின்றது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

வேட்டையன் படத்தின் கதையை பொருத்தவரையில் நீட் தேர்வினால் உயிரிழக்கும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் குரலை திரையில் காட்டியுள்ளார்கள். குறிப்பாக ரஜினிகாந்த் மாஸ் ஹீரோவுக்கான கண்டென்ட்டாக காணப்படுகின்றார். வில்லனுக்கு எந்த வகையில் தண்டனையை பெற்றுக் கொடுக்கலாம் என நகர்த்திய விதமும் சிறப்பாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் வசூல் தொடர்பிலும் இந்த படம் மொத்தமாக எவ்வளவு வசூலிக்கும் என்பது குறித்தும் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சனங்களை முன்வைத்தார்.


அதிலும் குறிப்பாக தற்போது தமிழ்நாட்டில் பெய்து வரும் பருவமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதை மையமாகக் கொண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த வசூலை கன மழை தான் காலி பண்ணிச்சு. இப்ப இந்த படத்துக்கு வில்லன் அதேதான். இனிமேல் 300, 400 கோடி வசூல் என்று வடை சுட்டால் யாரும் நம்ப மாட்டாங்க என்று பதிவிட்டு ரஜினி ரசிகர்களை கோவமடைய செய்துள்ளார்.

அதேபோல வேட்டையன் திரைப்படம் 650 கோடிகளை வசூல் செய்யும் என பலரும் கருத்து தெரிவித்து வர அதனை கலாய்க்கும் விதமாக 650 வடை என்று தட்டில் இருப்பதைப் போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகின்றது.


Advertisement

Advertisement