• Apr 23 2026

கறுப்பு சேலையில் இளசுகளை மயக்கும் வாணி போஜன்.. லேட்டஸ் கிளிக்ஸ் இதோ..

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றிகரமாக மாறிய நடிகைகளில் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பவர் வாணி போஜன். மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார்.

விஜய் டிவியில் ஆரம்பமான இவரின் பயணம், சன் டிவியின் பிரபலமாக ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் ‘சத்யா’ கதாபாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய திருப்பத்தை கண்டது. அந்த கதாபாத்திரம் இவரை பட்டித்தொட்டி எங்கும் அறிமுகப்படுத்தியது. இதனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றார்..

சின்னத்திரையில் கிடைத்த இந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற வாணி போஜன், திரைப்பட உலகிலும் தனது திறமையை நிரூபித்தார். தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான அவர், தமிழில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் லாக் அப், மிரள், லவ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


மேலும், வெப் சீரிஸ்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இவர், பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை மாறுபடுத்திக் காட்டி வருகிறார். இயல்பான நடிப்பு, எளிமையான தோற்றம் ஆகியவை இவரை ரசிகர்களிடம் மேலும் நெருக்கமாக்கியுள்ளது.

இந்த நிலையில், நடிகை வாணி போஜன் கறுப்பு சேலையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சின்னத்திரையில் இவரை நயன்தாரா என ரசிகர்கள் கொண்டாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement