• Dec 26 2024

வரலட்சுமி திருமணம் எப்போது தெரியுமா? வெளிநாட்டு கடற்கரையில் பிரமாண்டமாக..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை வரலட்சுமி மும்பையை சேர்ந்த நிக்கோலா சச்தேவ் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று சரத்குமார் குடும்பத்தினரால் கூறப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நிக்கோலா சச்தேவ் - வரலட்சுமி திருமணம் ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக தாய்லாந்தில் உள்ள அழகிய கடற்கரையில் செட் போடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட் பிரபலங்கள் திருமணம் போல் பிரமாண்டமாக இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும், இந்த திருமணத்தில் கலந்து கொள்பவர்களை மும்பையில் இருந்து  அழைத்துச் செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி திருமணத்துக்கு முந்தைய நாள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மெஹந்தி நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அதேபோல் திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ஒரு சில கோடிகள் நிக்கோலா சச்தேவ் - வரலட்சுமி திருமணத்திற்கு செலவு செய்ய இரண்டு குடும்பத்தினரும் திட்டமிட்டு இருப்பதாகவும் இதுவரை நடைபெறாத அளவில் மிகவும் பிரமாண்டமாக இந்த திருமணத்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement