• Dec 27 2024

ஒரே வருடத்தில் கணவரை பறிகொடுத்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை.. 2வது திருமண நாளில் உருக்கம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

திருமணம் ஆகி ஒரே வருடத்தில் கணவரை பறிகொடுத்த ’பாரதி கண்ணம்மா’ உள்பட பல சீரியல்களில் நடித்த நடிகை இரண்டாவது திருமண நாளில் உருக்கமாக செய்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாரதி கண்ணம்மா’ சன் டிவியில் ஒளிபரப்பான ’வாணி ராணி’ ’நாதஸ்வரம்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர்  அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான ஒரே ஆண்டில் அரவிந்த் திடீரென மாரடைப்பால் காலமானதையடுத்து ஸ்ருதி சண்முகப்பிரியா உடைந்து போனார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீண்டு வரவே பல நாட்கள் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அவர் இரண்டாவது திருமண நாளை முன்னிட்டு உருக்கமாக செய்த பதிவில் கூறியிருப்பதாவது: முதல் முறையாக நீ இல்லாமல் திருமண நாளை கொண்டாடி வருகிறேன், நீ என் அருகில் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன், இந்த உலகம் நீ இல்லாத திருமண நாளை கொண்டாடுவதாக கூறினாலும், நீ என் பக்கத்தில் இருப்பதைப் போல தான் நான் நினைக்கிறேன், நீ எப்போதுமே என் அருகில் இருப்பாய் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

நான் அழுதால் உனக்கு பிடிக்காது என்பது எனக்கு தெரியும், அதனால் தான் நான் அழுகப்போவது இல்லை, இந்த நாள் முழுவதும் உனக்கு பிடித்த விஷயங்களை செய்யப் போகிறேன், நாம் எப்படி எல்லாம் வாழ ஆசைப்பட்டோமோ, அப்படி வாழ்ந்து காட்டி உன்னை பெருமைப்படுத்த போகிறேன், உன்னை சந்திக்க காத்திருக்கிறேன்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement