• Dec 26 2024

இப்படி பிடிச்சு வச்சு மசாஜ் பண்ணினா யார் தான் வேண்டாம்னு சொல்லுவாங்க? வரலட்சுமி செய்த காரியம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகை வரலட்சுமி. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் நடிகை வரலட்சுமிக்கும் ஆர்ட் கேலரி உரிமையாளர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம்  நடைபெற்றுள்ளது.இது தொடர்பிலான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.


ஆனாலும், அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவருக்கு விவகாரத்தாகி 11 வயதில் மகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.


இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சை ஏற்படவும், என்னை பற்றி பொய்யான பழைய செய்திகளை ஏன் பரப்புகின்றீர்கள் என ஊடக நிறுவனங்களை கடுமையாக சாடி இருந்தார். அதன்பின்னர் தனது வருங்கால கணவருடன் வெளிநாட்டு பயணங்களில் என்ஜோய் பண்ணி வருகிறார்.

இந்த நிலையில், நடிகை வரலட்சுமி தனது எதிர்கால கணவருக்கு தலையில் மசாஜ் செய்து விடும் வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement