• Dec 27 2024

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஒரு சீரியல் போதாதா? மறுபடியும் விஜய் டிவியில் ஒரு அண்ணன் - தம்பி கதை சீரியல்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ என்ற சீரியல் மூன்று அண்ணன் தம்பிகள் குறித்த கதையம்சம் கொண்டதாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சீரியலிலும் 3 அண்ணன் தம்பிகள் கொண்ட கதையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ’தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் முடிவடைந்ததை அடுத்து புதிய சீரியல் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ’வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்ற சீரியல் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ’ஒரு பெரிய ஆலமரம் போன்ற குடும்பத்தில் விஸ்வநாதன் அய்யா தான் குடும்பத் தலைவர், அவருக்கு மூன்று பையன்கள், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம்.



மூத்த மகன் அர்ஜுன் ஒரு பக்கம் குடும்பம், இன்னொரு பக்கம் பிசினஸ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார். இரண்டாவது மகன் அஜய் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் வாதாடுவதில் கெட்டிக்காரர், ஆனால் குடும்பமா? காதலா? என்று வந்தால் கொஞ்சம் தடுமாறுவார். கடைக்குட்டி கண்ணன் ஜாலியானவர், இந்த வீடுதான் உலகம், பெரிய ஆசை கனவு என்று எதுவும் அவனுக்கு கிடையாது.

மூன்று அண்ணன் தம்பிகளுக்கு வெவ்வேறு குணங்கள் இருந்தாலும் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் இந்த சகோதரர்களின் கதை தான் ’வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று அந்த ப்ரோமோ வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல் எப்படி இருக்கும் என்பதை போக போக பார்ப்போம்.

Advertisement

Advertisement