• Dec 26 2024

இனிமேல் சினிமாவே வேண்டாம்.. லட்சக்கணக்கில் சீரியலில் சம்பாதிக்கும் ஆதி குணசேகரன்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வந்த ஜி மாரிமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர்பாராத விதத்தில் காலமான நிலையில் அவருக்கு பதிலாக தற்போது எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் அவரது கேரக்டர் பார்வையாளர்கள் மத்தியில் ஒட்டாமல் இருந்த நிலையில் தற்போது அவரை ஆதி குணசேகரன் கேரக்டரில் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதை அடுத்து தற்போது மீண்டும் இந்த தொடர் சூடு பிடித்து வருகிறது.

இந்த நிலையில் வேல ராமமூர்த்தி நடிகராக திரையுலகில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வாங்கிய சம்பளத்தை விட தற்போது பல மடங்கு சம்பளம் எதிர்நீச்சல் சீரியல் மூலம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.  

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு படத்திற்கு நான்கு லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வேல ராமமூர்த்தி தற்போது தினமும் 50,000 சம்பளம் வாங்கிக் கொண்டு வருவதாகவும் இதனால் அவருக்கு ஒரு மாதத்திற்கு 15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இனி திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு சீரியலில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

திரைப்படங்களில் நாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதும்  குணச்சித்திர நடிகர்களுக்கு மிகவும் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டு வருவதால் தற்போது திறமையான பல நடிகர்கள் சீரியலுக்கு மாறி வருவதும் அதன் பின் அவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

ஏற்கனவே மகாநதி சங்கர், சரவணன்,  ஸ்ரீகுமார், சஞ்சய் உள்ளிட்டோர் தற்போது கிட்டத்தட்ட திரையுலகையே மறந்துவிட்டு முழுவதுமாக சீரியல்களில் நடித்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் இவ்வளவு நாள் திரைப்படமே கதி என்று இருந்த வேல ராமமூர்த்தி இனி தொடர்ந்து பல சீரியல்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement