• Dec 25 2024

ஈஸ்வரியை அம்மா என்று கூப்பிட்ட வெண்பா! அப்பத்தாக்கு ஒண்ணும் ஆக கூடாது; சீக்கிரம் அந்த கெழவன போட்டு தள்ளுங்க! மீண்டும் சூடுபிடிக்கும் எதிர்நீச்சல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல எதிர்நீச்சல் சீரியலில், ஜீவானந்தத்தை போட்டுக் தள்ள வேண்டும் என்ற முடிவில் குணசேகரன், கதிர் உறுதியாக இருந்து வருகின்றனர். ஆனாலும்,  ஜீவானந்தத்தை காப்பாற்றும் நோக்கில், கௌதம் யாருக்கும் தெரியாமல் ஜீவானந்தம் செல்லும் இடத்திற்கு எல்லாம் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு செல்கிறார்.

அந்த வகையில் நேற்று திருவிழாவிற்காக கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற வெண்பாவை அழைப்பதற்காக ஜீவானந்தம் கோவிலுக்கு வருகிறார்.அந்த  நேரத்தில் ஈஸ்வரியுடன் பேசிக் கொண்டிருக்க குணசேகரன் அதனை பார்த்து விடுகிறார். 

பிறகு ஒரு கட்டத்தில் 'வெண்பா எங்க கூடயே இருக்கட்டும் நீங்க நாளைக்கு நடக்கும் பங்ஷனுக்கு வாங்க' என ஜீவானந்தத்தை குணசேகரன் அழைக்கிறார். அந்த பங்ஷனில் தான் அப்பத்தா யாருக்கு அந்த 40% சொத்து என்பதை அறிவிக்க உள்ளார்.


இந்த பங்க்ஷனுக்கு சிறப்பு விருந்தினராக ஜீவானந்தம் வர இருப்பதால் அவரை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரொமோவில், குணசேகரன் வெண்பாவை அழைத்து போலாமா என கேட்க, அம்மா என குழந்தை கூப்பிட, 'அம்மாவா யாரு என குணசேகரன் கேட்க, 'ஈஸ்வரி அம்மாதான்' என குழந்தை சொல்ல சரி என தலையாட்டுகிறார்.


இதையடுத்து,  சக்தி மற்றும் மருமகள்களிடம் தனியாக ஜீவானந்தம் பேசிக் கொண்டிருக்க, 'இவ்வளவு நடந்தும் விட்டுட்டீங்களே சார்' நந்தினி எனக் கேட்க, 'குணசேகரன் என்னையும் விருந்தாளியாக கூப்பிட்ட அதுக்கு ஒரு காரணம் இருக்கு. எல்லாம் தெரிஞ்சும் இங்க நான் வந்து இருக்கனா அதுக்கும் ஒரு காரணம் இருக்கு' என்று கூறுகிறார். 

மறுநாள் பங்க்ஷன் தயாராக இருக்கும் நிலையில் அனைவரும் அப்பத்தான் ஜீவானந்ததற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ. 

Advertisement

Advertisement