• Dec 25 2024

திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பா? வேதனையில் வெங்கடாஜலபதி-ஆர்யன் ஷாம்

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

"பிரமாண்ட நாயகன்" என்ற பெயரில் திருப்பதி வெங்கடாஜலபதி வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருந்தார்கள். அதில் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்தார் ஆர்யன் ஷாம்.


இந்தப் படத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது படத்தைப் பார்த்த அவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்த ஆர்யன் ஷாம்நடிப்பைப் பார்த்து பாராட்டிஆர்யன் ஷாமிற்கு யூத் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கி அதற்கான சான்றிதழும் கொடுத்து கௌரவித்தார்கள்.


பிரமாண்டநாயகன்படம் யூடியூப்களில் ஓடிக் கொண்டிருக்கிறது இதையடுத்து பிரமாண்ட நாயகன் படத்தின் நேர் எதிர்மறையான நரபலி கதையம்சம் கொண்ட அந்த நாள் என்ற பேய்படத்தை கிரீன் மேஜிக் எண்டர் டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித் து,அதில் திகிலூட்டும் நாயகனாக கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.


இந்நிலையில் இவர் திருப்பதி வெங்கடாஜலபதி ஆசியுடன் அவர்களின் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் புனிதமான பிரசாதம் அதில் கலப்படம் நடந்தது என்பது தெய்வத்தையே நிந்தித்தது போல் இருக்கிறது என்கிறார் நடிகர் ஆர்யன் ஷாம்.



Advertisement

Advertisement