• Dec 25 2024

அதிரும் திரையரங்கம்..! குவியும் கலெக்ஷன்..! 7வது நாளில் எகிறிய வசூல்...!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான புஷ்பா-2 திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோரின் அபாரமான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 7 நாட்கள் கடந்துள்ள நிலையில் வசூல் விபரம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. 


ஏற்கனவே பல சாதனைகளை புரிந்துவரும் புஷ்பா-2 திரைப்படம் ரிலீசாகி முதல் நாளே உலகளவில் ரூ. 275 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரையில் எந்த திரைப்படமும் முதல் நாளிலே இவ்வளவு கோடி வசூல் செய்தது இல்லை இதுவே முதல் தடவை என ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 


இதனை தாண்டிபாலிவுட்டில் ரூ. 65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. உலகளவில் 1000 கோடி வசூல் செய்து முக்கிய திரைப்படங்களை முந்திய புஷ்பா- 2 தற்போது 7 நாட்கள் கடந்துள்ள நிலையில் 1032 கோடி வசூல் செய்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு வசூல் வேட்டை நடத்திய பெருமை புஷ்பா-2 திரைப்படத்திற்க்கே உரித்தாகும்.

Advertisement

Advertisement