• Dec 26 2024

சில மூஞ்சிய பார்த்தாலே புடிக்கல... இவங்க எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்... போட்டியாளரை திட்டி தீர்த்த விசித்ரா...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடையும் கட்டத்தில் இருக்கும்  பிக் பாஸ் நிகழ்ச்சி  கடைசி கட்டம் என்பதால் பலருடைய உண்மை குணங்கள் வெளியேவருகிறது . ஒருவருக்கு ஒருவரை டார்கெட் செய்து வன்மத்தை கொட்டி வருகின்றனர். இதில் மாயா  செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. அதேபோல் விசித்ராவும் ஒருவர் மீது தன் வன்மத்தை எல்லை மீறி காட்டிக் கொண்டிருக்கிறார்.


முக்கியமாக விசித்திராவின் குண இயல்புகள் வெளிய வந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.   அதாவது இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து தினேஷ், விசித்ரா இருவருக்கும் நடக்கும் பனிப்போர் நாம் அறிந்தது தான். அதில் இருவருக்கும் முன் ஜென்ம பகை இருக்குமோ என்று என்னும் அளவுக்கு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.


அதில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் விசித்ரா பாத்திரம் கழுவிக் கொண்டே தினேஷை கண்டபடி திட்டிக் கொண்டிருக்கிறார். சில மூஞ்சிய பார்த்தாலே புடிக்கல. இவங்க எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம். வாழ்ந்து என்ன பிரயோஜனம்.  இப்பிடி மனம் நோகும் அளவுக்கு விசித்திரா தினேஷை கண்ட படி திட்டியுள்ளார் . 


இதிலிருந்து அவருக்கு தினேஷ் மீது எந்த அளவிற்கு வன்மம் இருக்கிறது என வெளிப்படையாக தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் விசித்ராவின் சுயரூபம் என கூறி வருகின்றனர். ஆக மொத்தம் தெய்வத் தாயின் உண்மை நிறம் இதன் மூலம் வெளிவந்துள்ளது

Advertisement

Advertisement