• May 23 2026

சம்பவம் லோடிங்.. - விக்னேஷ் சிவனின் 'LIK' பட ட்ரெய்லர் அப்டேட்டை அறிவித்த படக்குழு.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். சமீப காலத்தில் அவரது படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது அவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “LIK” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.


இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருப்பதுடன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். மேலும், கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் அரசியல்வாதியும் நடிகருமான சீமான் நடித்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்திற்கு இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார்.

“LIK” திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், படத்திற்கான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது, “LIK” படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி எப்படி இருக்கும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement