• Dec 26 2024

2050 வரை இயற்கை விவசாயத்தை பேசப்போறாரா சீமான்? ‘எல்.ஐ.சி’ படத்தின் கதை லீக்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும்எல்..சிஎன்றலவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் கதை தற்போது லீக் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோமாளிமற்றும்லவ் டுடேஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இனி அடுத்து படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறி இருந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா தியான மையம் உள்பட பல இடங்களில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பெரிய பெரிய கட்டங்களில் உள்ள மொட்டை மாடிகளில் படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த படம் 2050 ஆம் ஆண்டு நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதை என்றும் கூறப்படுகிறது.



இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் அப்பாவாக சீமான் நடிப்பதாகவும் அவருடைய கேரக்டர் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் 2050 ஆம் ஆண்டு வரை சீமான் இயற்கை விவசாயம் குறித்து பேச போகிறாரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த படத்தின் நாயகியாக பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி மற்றும் ஒரு முக்கிய கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்து வருகின்றனர். மேலும் யோகி பாபு, கௌரி கிஷான் உள்பட பலர்  நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

முதல் முதலாக இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை ரொமான்ஸ் மட்டும் காமெடியுடன் கூற இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement