• Dec 25 2024

விஜய் மற்றும் ரஜனி இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளது... ஜெயிலர் 2 கூடிய விரைவில் வரும்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக ரஜினி வலம் வந்து கொண்டிருக்கிறார். ரஜினி தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் ஒரு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். த.ச.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் ரஜினி.


ஏற்கனவே மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவர் நடித்த லால்சலாம் திரைப்படம் இன்னும் திரைக்கு வராமல் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. வேட்டையன் படத்திற்கு பிறகு ஜெய்லர் 2 அதன் பின் மாரிசெல்வராஜின் கூட்டணி, லோகேஷ் உடனான கூட்டணி என மிகப்பெரிய இயக்குனர்களுடன் கூட்டணி சேர இருக்கிறார்.


கிட்டத்தட்ட மூன்று வருட காலம் மிகவும் பிஸியான நடிகராகவே இருக்கப் போகிறார். இந்த நிலையில் ஜெய்லர் 2 படத்தில் விஜய் நடிப்பதாக ஒரு டாக் இணையத்தில் போய்க் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறுகையில் ‘சினிமாவை பொறுத்தவரைக்கும் என்ன வேண்டுமானாலும் சினிமாவில் நடக்கலாம்.’


‘ஒரு வேளை ரஜினியே விஜயிடம் தம்பி என் படத்தில் ஒரு கேமியோ பண்ணிக் கொடு என்று கேட்டால் கூட சந்தேகம் ஒன்றுமில்லை. அதுமட்டுமில்லாமல் விஜய் ரஜினி போட்டியை நிறுத்துவதற்கு கூட இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது’ என செய்யாறு பாலு கூறினார். அதையும் தாண்டி ஜெய்லர் கொடுத்த வெற்றி ஜெய்லர் 2விலும் இருக்க ரஜினி ஒரு வைராக்கியத்துடன் தான் செயல்படுவார்.

Advertisement

Advertisement