• May 22 2026

விஜய் ஆண்டனி மீண்டும் சோக கதையிலா? அப்பா குட்டி பர்ஸ்ட் லுக் பார்த்ததும் ரசிகர்கள் கலக்கம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராகவும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். அவரது நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படமான 'அப்பா குட்டி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில், ஒரு சிறுமியை தோளில் சுமந்தபடி விஜய் ஆண்டனி உணர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த காட்சி ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

இந்த படத்தை இயக்குநர் இளங்கோ ராமு இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்சன் திவாகர், அருவி மதன், ஹரிப்ரியா மற்றும் லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படம் தெலுங்கில் ‘நானா குட்டி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படம் குடும்ப உறவுகளையும் உணர்ச்சிகளையும் மையமாகக் கொண்ட ஒரு மனதை வருடும் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

Advertisement

Advertisement