• Dec 25 2024

லைஃப்டைம் செட்டில்மென்ட் கேட்கும் விஜய்? தளபதி 69ல் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவங்கியிருக்கும் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து தளபதி 69 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார். தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கவிருக்கிறார். 


இந்நிலையில் தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளம் தான் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஹெச். வினோத் படத்தில் நடிக்க ரூ. 275 கோடியை சம்பளமாக கேட்டிருக்கிறார் விஜய் என கூறப்படுகிறது. இது தான் அவர் கெரியரில் அதிக சம்பளமாகும். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தன் கடைசி படத்திற்கு ரூ. 275 கோடி கேட்கிறாராம் விஜய்.


விஜய் கேட்கும் சம்பள விபரம் அறிந்தவர்களோ, படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கு மேல் ஹீரோவுக்கு கொடுத்துவிட்டால் மீதமுள்ள தொகையை வைத்து எப்படி தரமான பொழுதுபோக்கை அளிக்க முடியும். ஹீரோக்கள் இப்படி ரூ. 200 கோடி சம்பளம் கேட்பது சரியல்ல. ரூ. 200 கோடி சம்பளம் வாங்கினால் ரூ. 1000 கோடி ஹிட் படத்தை கொடுக்க வேண்டும். அதை கொடுத்துவிட்டு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கட்டும் என பேசுகிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை. 




Advertisement

Advertisement