• Dec 25 2024

ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய விஜய் டிவி ரக்ஷன்... மறக்குமா நெஞ்சம் திரைப்படம்... ரசிகர்கள் அதிரடி விமர்சனம்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் ரக்ஷன். இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த இவருக்கு குக்வித் கோமாளி நிகழ்ச்சியே சிறந்த அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.


இது தவிர கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.


அதேபோல தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய "வேட்டையன்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா அவருடன்  இணைந்து "மறக்குமா நெஞ்சம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். 


90ஸ் கிட்ஸ் மனதை கவரும்வண்ணம் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை Filia என்டர்டைன்மென்ட்டோடு இணைந்து குவியம் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை யோகேந்திரன் இயக்கியுள்ளார். மறக்குமாநெஞ்சம் வெளியாகி ஒரு வார நாளாக இருந்தாலும் நல்ல ஆக்கிரமிப்பைப் பார்க்கிறது தமிழக திரையரங்குகள்.


இந்நிலையில் திரையரங்குக்கு சென்றிருந்த நடிகர் ரக்ஷனுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பளித்தனர். ரசிகர்களுடன் டான்ஸ் ஆடி அவர்களையும் மகிழ்ச்சி படுத்தினார். பின்னர் இந்த திரைப்படம் எந்தவித புகைபிடித்தல், குடித்தல் போன்ற சீன்கள் இல்லை அதனால் குடும்பத்துடன் பார்க்கலாம் என கூறியுள்ளார். மேலும் இந்த படம் குறித்து ரசிகர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர். 


90ஸ் திரைப்படம் நல்லா இருக்குது, நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்க, ரக்ஷன் இயல்பா நடிச்சி இருக்காரு, காதல் ,நட்பு ஸ்கூல் லைப் எல்லாம் அழகா காட்டி இருக்காங்க என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். 

Advertisement

Advertisement