• Dec 26 2024

சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்.. ரஜினி பட இசையமைப்பாளர் காலமானார்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’நான் அடிமை இல்லை’ மற்றும் விசு இயக்கத்தில் உருவான சில படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல்நிலை குறைவால் சென்னையில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 80 களில் பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆனந்த். ’நான் அடிமை இல்லை’ ’நாணயம் இல்லாத நாணயம்’ ’சட்டம் ஒரு இருட்டறை’ ’கோவலன் அவன் காவலன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த ’நான் அடிமை இல்லை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஒரு ஜீவன் தான்’ என்ற பாடல் இன்றும் கேட்க இனிமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்தார் என்று பலர் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இந்த பாடலை கம்போஸ் செய்தது விஜய் ஆனந்த் என்பது ஆச்சரியமான ஒரு தகவல் ஆகும். தமிழ் படங்களுக்கு மட்டுமின்றி இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் விஜய் ஆனந்த் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்



இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement