• Dec 26 2024

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த விஜய் தேவரகொண்டா... தீயாய் பரவும் வீடியோவால் பரபரப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பலமொழிகளிலும் டாப் ஸ்டார் ஆக நடித்து வருகின்றார்.

தற்போது கௌதம் தின்னத்துறை இயக்கத்தில் தனது பன்னிரண்டாவது படத்தில் நடித்து வருகிறார்.. விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இறுதியாக நடித்த குஷி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

d_i_a

அவரது முந்தைய படங்களும் தோல்வி என்பதால் மீண்டும் கம்பேக் கொடுக்கும் வகையில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றார் விஜய் தேவரகொண்டா. அடுத்த வருடம் மார்ச் 28ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்  இந்த படத்திற்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா மாடியில் இருந்து நடந்து வரும்போது தவறி விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதன்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதோ வீடியோ..


Advertisement

Advertisement