• Dec 26 2024

’கோட்’ படத்தை பார்த்தவுடன் விஜய் போட்ட உத்தரவு.. வெங்கட் பிரபு அதிர்ச்சி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை படமாக்கிய காட்சிகளை, எடிட் செய்த காட்சிகளை விஜய் பார்த்ததாகவும் அதன் பின்னர் வெங்கட் பிரபு மற்றும் அவரது குழுவினருக்கு விஜய் ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை விஜய் பார்த்து திருப்தி அடைந்ததாகவும், வெங்கட் பிரபு பாணியில் விளையாட்டுத்தனம், காமெடி மற்றும் ஆக்சன் ஏரியாக்கள் எல்லாம் சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் படத்தைப்பற்றி அதிகமாக ஹைப் ஏற்படுத்த வேண்டாம் என்றும் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டாம் என்றும், ஊடகங்களில் பேட்டி அளிக்கும் போது படம் குறித்து அதிகமான பில்டப் செய்ய வேண்டாம் என்றும் வெங்கட் பிரபுவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் படம் பற்றி அடக்கி வாசிக்கவும் என்றும் கூறியுள்ளாராம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ படத்தை ஓவர் பில்டப் செய்ததால் தான் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்றும், ஆனால் எதிர்பார்த்த அளவு படம் இல்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்றும் விஜய் கூறியதாகவும், அதனால் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்து விட வேண்டாம் என்று விஜய் கூறியதாகவும் தெரிகிறது. விஜய்யின் இந்த கட்டளையை கேட்டு வெங்கட் பிரபு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement