• Dec 26 2024

சன் டிவியில் முடியும் இன்னொரு சீரியல்.. விரைவில் அதே ஹீரோவுடன் அடுத்த சீரியல்..

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

2024 ஆம் ஆண்டு சீரியல் முடியும் ஆண்டாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே சன் டிவி, விஜய் டிவி உள்பட ஒரு சில டிவிகளில் சீரியல்கள் அடுத்தடுத்து முடிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மேலும் இரண்டு தொலைக்காட்சிகளிலும் புதுப்புது சீரியல்களை ஆரம்பிக்கும் காட்சிகளையும் பார்த்து வரும் நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இன்னொரு சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாகவும் அந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ’பிரியமான தோழி’ என்பதும் இந்த சீரியல் கடந்த இரண்டு ஆண்டுகளாக   ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு சில நாட்கள் அல்லது ஒரு சில வாரங்களில் இந்த சீரியல் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



ஆனால் அதே நேரத்தில் இந்த சீரியலை தயாரிக்கும் நிறுவனம் இன்னொரு சீரியலுக்கு தயாராகி விட்டதாகவும் இந்த சீரியலில் நாயகனாக நடித்து வரும் விக்கி ரோஷன் தான் அடுத்த சீரியலின் ஹீரோ என்றும் கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அடுத்த சீரியலின் டைட்டில் ’கல்யாண கலாட்டா’ என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்த சீரியல் குறித்த முன்னோட்ட வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் ’பிரியமான தோழி’ முடிந்த ஒரு சில நாட்களிலே இந்த புதிய சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ’மல்லி’ என்ற புதிய சீரியல் தொடங்கியுள்ள நிலையில் ’புன்னகை பூவே’ என்ற சீரியலும் புதிதாக தொடங்க இருக்கும் நிலையில் தற்போது அடுத்ததாக ’கல்யாண கலாட்டா’ என்ற சீரியல் தொடங்க இருப்பதால் சீரியல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து புதுப்புது விருந்துகள் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement