தமிழகத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தொடர்ந்து வேட்பு தாக்கல் செய்யும் நிகழ்வும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில் நேற்றைய தினம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதன்போது விஜயின் அசையும் சொத்து, அசையா சொத்து மற்றும் அவர் தனது குடும்பத்திற்கு கொடுத்த கடன்கள் மற்றும் விஜயின் மொத்த சொத்து மதிப்பு என பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் விஜயின் சொத்துகளில் அவருக்கு 10 வீடுகள் சொந்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நீலாங்கரையில் ஒரு வீடு, தொகுதியில் ஒரு வீடு, மயிலாப்பூரில் ஒரு வீடு, பள்ளிப்பட்டில் ஒரு வீடு, படூர், கொரட்டூர், சாலிகிராமம் பகுதியில் இரண்டு வீடுகள், சோழிங்கநல்லூர் பகுதியில் இரண்டு வீடுகள் என மொத்தம் 10 வீடுகள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஜய் நடிப்பை தாண்டி ரியல் எஸ்டேட் அதிபராகவும் உள்ளார். ஜெயா நகர் ப்ராபர்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் விஜயிடம் தற்போது BMW 530, Toyota Lexus 350, Toyota Vellfire, BMW 7, Maruti Swift, TVS XL Super என ரூ.7.52 கோடி மதிப்பிலான வாகனங்கள் உள்ளன.
மேலும் விஜயிடம் மொத்தமாக 520 கோடி சொத்து உள்ளதாகவும், அவர் தனது மனைவி சங்கீதாவுக்கு 12 கோடி, அப்பாவுக்கு மூன்று கோடி, அம்மாவுக்கு 87 லட்சம், மகனுக்கு 8 லட்சம் மற்றும் மகளுக்கு 4 லட்சம் என கடன் வழங்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!