• Sep 17 2026

விஜய் சினிமாவை விட்டு போனது ஏமாற்றம் தான்… பிரபல நடிகர் ஓபன்டாக்.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகர் சூரி, நடிகர் விஜய் குறித்து தெரிவித்துள்ள கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

சூரி தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், தெலுங்கு நடிகர் சுஹாஸ், ரவீந்திரா விஜய், அச்சுத் குமார், சச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற சூரி, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

“முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இது ஆரோக்கியமான விஷயம். அதே நேரத்தில் சினிமா துறையில் நடிகராக விஜய் இல்லாதது ஏமாற்றம் தான். அவர் விட்டுச் சென்ற அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...” என சூரி தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் பயணத்தை பாராட்டியதுடன், சினிமாவில் அவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என சூரி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.


Advertisement

Advertisement