• Dec 25 2024

விஜய் -ரஜனி தூரம் போங்க! இனி எங்க ஆட்டம்தான்! ஒரே நாளில் மோதும் சூப்பர் ஹீரோஸ்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூர்யா 44. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காத நிலையில் இதன் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து ப்ரோமோஷன் பணிகள் நடந்துவருகிறது.


கூடிய விரைவில் இந்த படத்தில் பெயர் அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்படும். இப்படி இருக்க சூர்யா 44 திரைப்படம் ரிலீஸ் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தில் வளம் வருகிறது. அதாவது 2025. ஏப்ரல் 10 திகதி இந்த திரைப்படம் ரிலீசாக இருப்பதாக தெரியவருகிறது. 


இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை என்ற திரைப்படமும் அதே திகதியை லோக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக மீண்டும் நித்தியா மேனன் நடத்துள்ளார். இதன் படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

d_i_a


பெரிய ஹீரோக்கள் இருவரும் ஒரே நாளில் மோதிக்கொள்ள உள்ளனர். இதனை கொண்டாடுவதற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து வேறு எந்த நடிகர்களின் படம் ஏப்ரல் ரிலீஸ் லிஸ்டில் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement