• Apr 21 2025

ரீ- ரிலீஸில் வெற்றிக்கொடி ஏந்தியவிஜய்! "சச்சின்" படத்தால் கோடிக் கணக்கில் குவிந்த வசூல்..!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பழைய வெற்றிப் படங்களை திரையரங்கில் மீண்டும் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது. கில்லி, எம்.குமரன் s/o மகாலட்சுமி ஆகிய படங்கள் மீண்டும் ரீ- ரிலீஸாகி திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளோடு ஓடி வருகின்றன.


இந்த வரிசையில் தற்போது திரையரங்குகளை அதிரவைத்து கொண்டிருப்பது தான் 2005ம் ஆண்டு வெளியான விஜய் நடித்த “சச்சின்” திரைப்படம். ‘சச்சின்’ திரைப்படம் சமீபத்தில் ரீ- ரிலீஸானது. ரிலீஸ் செய்த நாளிலிருந்து ஹவுஸ் புல் காட்சிகள் பதிவாகின. பல இடங்களில் இப்படத்தினைப் பார்ப்பதற்கு அதிகளவான மக்கள் குவிந்தனர்.


அந்தவகையில் தற்பொழுது வெளியான தகவலின் படி, சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸாகி ரூ.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த வசூல் குறித்த மதிப்பீடுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மும்பை, பெங்களூர், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற இடங்களில் விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்த Fan show மூலமாக வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வசூல் விஜய் ரசிகர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement