விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வார இறுதி ப்ரோமோ வெளியாகியுள்ளது. வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்க எலிமினேஷன் தனக்கானதா என்ற பதற்றத்தில் போட்டியாளர்கள் இருக்க அதிரடியாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் வெளியான ப்ரோமோவில் மேடைக்கு வந்த விஜய் சேதுபதி "இங்க விளையாட்டு என்பது நம்முடைய வீட்டு ஆளுங்க அவங்களுக்குள்ள விளையாடுறது. அவங்க வீட்டு உறவினர்கள் எல்லாரும் வந்து பல அறிவுரை கொடுத்தாங்க. அது அழகா இருந்தது அன்பா இருந்தது" என்று கூறினார்.
மேலும் "சில பேர் விளையாட்டை நேர்மையா விளையாட சொல்லுறாங்க, சில பேர் பேசுனது ரொம்ப ஆழமா இருந்தது. எல்லாம் நமக்கு புரிஞ்சது வீட்டுல உள்ளவங்களுக்கு புரிஞ்சதா இல்லையானு தெரியல என்னனு விசாரிப்போம்" என்று சொல்வதுடன் ப்ரோமோ முடிவடைகிறது. இன்றைய நாளில் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது யார் எலிமினேட் ஆகுவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!