• Dec 26 2024

விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மகாராஜா’ எப்படி? ட்விட்டர் பயனாளிகளின் விமர்சனம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சி முடிந்தவுடன் அவர்கள் தங்கள் சமூக வலைதளத்தில் செய்த பதிவு பாசிட்டிவாக உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்த சமீபகால படங்கள் சொதப்பி இருந்த நிலையில், பல படங்கள் தோல்வி அடைந்த நிலையில்,  விஜய் சேதுபதிக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக  அமைந்துள்ளதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் வெறித்தனமான நடிப்பு, அனுராக் காஷ்யப் வில்லத்தனம் , விறுவிறுப்பான திரைக்கதை, அசரவைக்கும் காட்சியமைப்பு ஆகியவை இந்த படத்தின் பிளஸ் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டின் சிறந்த படம் மகாராஜா என்று கூறலாம் என பாசிட்டிவ் வசனங்கள் குவிந்து வரும் நிலையில், படம் பார்த்த அனைவருமே படத்தில் எந்த ஒரு நெகட்டிவ் கருத்தையும் வெளியிடவில்லை என்பதும் இதனால் விஜய் சேதுபதி உட்பட படக்குழுவினருக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழுத்தமான திரைக்கதை, அம்சமான நடிப்பு, ஆக்ரோஷமான வில்லத்தனம், இடைவேளைக்கு பிறகு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்  ஆகியவை இந்த படத்தில் இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் விஜய் சேதுபதிக்கு தனது ஐம்பதாவது படம் ஒரு வெற்றி படம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Advertisement

Advertisement