• Jan 12 2025

மண்டையை கழுவியது யார்! விளையாட்டை திசை திருப்பியது யார்! விசாரிக்கும் விஜய் சேதுபதி!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன் 8 தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சுவாரஷ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் இந்த சீசனில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 


இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கிறது. நேற்று போட்டியாளர் அருண் வெளியேறினார். அடுத்து யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் அவளாக எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகிய ப்ரோமோவில் விஜய் சேதுபதி "மீண்டும் உள்ளே வந்த போட்டியாளர்களின் மண்டையை கழுவிய போட்டியாளர்கள் யார்?" என்று கேட்டார். அதற்கு ஜாக்குலின் "ரவீந்தர் சார் என்னுடைய கருத்து என்று சொல்லி எல்லோருடைய மண்டையையும் கழுவிய மாதிரி இருந்தது" என்று சொல்கிறார்.


மேலும் "படையெல்லாம் திரட்டி என்ன என்னமோ ட்ரை பண்ணி பார்த்தாரு ஒன்னும் வேலைக்கு ஆகல" என்று தீபக் கூறினார். "நான் பெட்டி எடுத்தால் நல்லா இருக்கும் என்று கூறினார்" என ரயான் கூறினார். "என்னை பெட்டி எடுத்துட்டு போனா எப்படி இருக்கும் என்று கேட்டாரு" என்று முத்து சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் சொல்வதை கேட்ட விஜய் சேதுபதி இவ்வாறு கூறினார். 


அவர் கூறுகையில் " இவர் பெட்டியை எடுத்துட்டு போகணும் , இவர் நல்லா விளையாடனும், இவர் தான் ஜெயிப்பாரு என்று ஏன் கேம திருப்புறிங்க என்று கேட்கிறார். அதற்கு ரவீந்தர் சொல்வதறியாது திகைத்து போய் இருக்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.  

Advertisement

Advertisement