• Apr 12 2025

மணிகண்டனுக்கு பணம் கொடுத்து உதவிய விஜய் சேதுபதி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளராகவும் நடிகராகவும் விளங்குபவரே மணிகண்டன். இவர் குடும்பஸ்தன், லவ்வர் மற்றும் குட் நைட் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்த நடிகராவார். குறிப்பாக, குடும்பஸ்தன் படம் தற்போது வெளியாகி உள்ளதுடன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பையும் பெற்றுக் கொண்டது.

மணிகண்டன் தற்போது சமூக ஊடகத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், அவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த விஜய் சேதுபதி பற்றி கூறியுள்ளார்.


அதில் அவர் , தன்னுடைய நண்பனுக்கு operation செய்ய வேண்டியிருந்ததாகவும் அந்த operation செய்யா விட்டால் அவன் உயிர் பிழைக்க மாட்டான் என டாக்டர் சொல்லி இருந்தாகவும் கூறியதுடன் அந்த வேளை தன்னிடம்  போதியளவு பணம் இல்லாது இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ,  எனக்கு யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை  என்றதுடன் உடனே தயங்காமல் விஜய் சேதுபதி அண்ணனிடம் கேட்டிருந்தேன் எனக் கூறியிருந்தார். அதன்போது அவர் சற்றும் தாமதிக்காமல் 10 நிமிடத்திலேயே எனக்கு  25 லட்சம் பண உதவி செய்திருந்தார் எனக் கூறினார் மணிகண்டன்.

இத்தகைய உயர்ந்த குணம் விஜய் சேதுபதி போன்று வேற யாருக்கும் இருக்காது என தெரிவித்ததுடன் அவர் அப்படி உதவியதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.


Advertisement

Advertisement