தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லன் கேரக்டரிலும் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் நடிக்கும் போதே கதாநாயகன் கேரக்டரில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லாமல் சிறந்த கதை களத்திற்கு ஏற்ப தனது கேரக்டரை ஏற்றுக்கொள்ளக்கூடிய கலைஞனாக காணப்பட்டார்.
விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளியான விடுதலை 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் சூரி, மஞ்சு வாரியர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். எனினும் விடுதலை படத்தின் முதலாவது பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இதன் இரண்டாவது பாகத்திற்கு கிடைக்கவில்லை.
d_i_a
விஜய் சேதுபதியின் 50வது படமாக மகாராஜா திரைப்படம் அமைந்தது. பலருக்கும் 50-வது திரைப்படம் தோல்விப் படமாக அமையும் நிலையில் மகாராஜா திரைப்படம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் சீன நாட்டிலும் வெற்றிக் கொடி நாட்டி உள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
இன்னொரு பக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோஸ்ட் ஆக களம் இறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் 7 சீசன்களையும் உலக நாயகன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த சீசனும் இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், விஜய் சேதுபதி கரகாட்டக்காரர்களுடன் வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த வீடியோவில் கொஞ்சம் கூட எனர்ஜி குறையாமல் அவர் குத்திய குத்தாட்டம் பார்க்கும் ரசிகர்களுக்கு செம உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.
\
Listen News!