• Dec 26 2024

விசித்ராவை வெற்றியடைய வைத்த விஜய் டிவி! அதிர்ச்சியில் தினேஷ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கின் மூன்றாவது டாஸ்க் நடைபெறுகின்றது. அதில் கில் அல்லது ஸ்ரே என்ற காட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் இருந்து வாதாட வேண்டும்.


இந்த நிலையில், தற்போது விசித்ராவும் தினேசும் அமர்ந்திருந்து வாதாடுகின்றனர். அதில் யார் பேசி வெற்றி பெறுவர் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இவ்வாறான நிலையில், எனக்கு தனிப்பட்ட ரீதியா உங்கள வெறுக்கனும் போகணும் என்பது கிடையாது என சொல்ல, எனக்கு டிக்கெட் டூ பினாலே முக்கியம் கிடையாது என விசித்ரா சொல்லுகிறார்.


மேலும், நீங்க பேசுற ஒரு சில விஷயம் எனக்கு வேதனையா இருக்கு.. நீங்க சக போட்டியாளர்கள் முன்னிலையில் பேசும் சில விஷயங்களை மக்கள் அப்படியே உண்மை என நம்புவார்கள் தானே என விசித்ரா சொல்லி உள்ளார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ. 

எனினும், இன்றைய டாஸ்க்கில் யார் யார் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதேவேளை, விஜய் டிவி திட்டம் போட்டே இவ்வாறு விசித்ராவை இதுவரையில் வெற்றி பெற வைத்துள்ளதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement