• Dec 26 2024

விஜய் டிவி புகழ் ஹீரோவாக நடித்த முதல் படம்.. சரியான ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி புகழ் ஹீரோவாக நடித்த முதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படக்குழுவினர் சரியான ரிலீஸ் தேதியை தேர்வு செய்துள்ளனர் என்று கூறப்பட்டு வருகிறது.

‘குக் வித் கோமாளி’ உள்பட ஒரு சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகழ், சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நிலையில் ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 3 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறை தொடங்கி சரியான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர் என்று கூறப்பட்டு வருகிறது. அதாவது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து, தேர்தலும் முடிவடைந்த நிலையில் மே 3 என்பது சரியான ரிலீஸ் தேதி என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த தேதியில் வேறு ஏதேனும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல்முறையாக நான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் மே 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்றும் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றும் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புகழ், ஷ்ரின் காஞ்ச்வாலா,  சிங்கம் புலி, மாரிமுத்து, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தன்வீர் மிர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் இயக்கி உள்ளார்.  


Advertisement

Advertisement