• Apr 17 2026

கவின் மனைவியை கடுப்பாக்கிய நடிகை ஆண்ட்ரியா.. திருமணமான சில மாதங்களில் குடும்பத்தில் குழப்பமா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கவினுக்கு திருமணம் ஆகி ஒரு சில மாதங்களே ஆகி உள்ள நிலையில் அவருடைய திருமண வாழ்வில் நடிகை ஆண்ட்ரியா குழப்பம் விளைவிக்கும் வகையில் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின் என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகள் அவரை படிப்படியாக உயர்த்திக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில் கவின் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்பட குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் அந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. கவின் புதிதாக திருமணமான ஒரு இளைஞராக நடிக்கும் நிலையில் அவருக்கும் அவரது புது மனைவிக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காயும் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் திரைக்கதை ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த படத்தை தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், நாயகி உட்பட அனைவரும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவின் நடித்த ’ஸ்டார்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் ஏற்கனவே இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement