• Dec 25 2024

வீட்டைவிட்டு பெட்டியுடன் கிளம்பிய விஜயா.. மீனாவின் மற்றொரு முகத்தை காட்டிய பார்வதி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், சத்யா எதற்காக திருடினான் என்ற உண்மையை அண்ணாமலையிடம் முத்து சொல்கின்றார். அதன்படி சும்மா வீட்டுக்கு வந்தவன திருட்டு பட்டம் கட்டினது அம்மா தான்.. அதனால தான் அவன் கோபத்தில் ஏதோ பண்ணிட்டான் என்று சமாதானம் செய்கின்றார்.

ஆனாலும் அண்ணாமலை அவன் செய்தது தப்புதான் என்று சொல்கின்றார். மேலும் அந்த நேரத்தில் மனோஜ் திருடும்போது அம்மாக்கு எதுவும் நடந்திருந்தால் என்ன செய்து இருப்பாய் என்று கேட்க, அப்படி என்றால் கல்யாணத்தின் போது எதையும் யோசிக்காமல் தானே ஓடினா.. அப்ப அம்மா அப்பாவுக்கு என்ன நடந்திருக்கும் என்று நீ யோசிச்சியா என மனோஜின் வாயை அடக்குகிறார் முத்து.

d_i_a

அதன் பின்பு விஜயா வீட்டுக்கு போலீசார் வந்து சத்யாவின் கம்லேண்ட் பற்றி பேசியதோடு, இது எங்களுடைய குடும்ப பிரச்சனை வாபஸ் வாங்குவதாக முத்து சொன்னதாக சொல்ல, அப்படி எல்லாம் இல்லை என்று சத்யா மீது கம்ப்ளைன்ட் கொடுக்கின்றார் விஜயா.


இதன்போது முத்துவும் மீனாவும் விஜயாவிடமும் அண்ணாமலையிடமும் கெஞ்ச அண்ணாமலையும் மனமிறங்கவில்லை. மீனா எல்லாரிடமும் கையெடுத்து மன்னிப்பு கேட்டு கதறுகின்றார். எனினும் கொஞ்சம் கூட ஈவிறக்கம் இல்லாத விஜயா அவன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து அவனை உன்னை தள்ளுவேன் என போலீசாரிடம் சைன் பண்ணி கொடுக்கின்றார்.

இதனால் எதுவுமே செய்ய முடியாத கட்டத்தில் மீனா கதறி அழுது கொண்டு உள்ளார். ஆனாலும் அவனை எப்படி வெளியே எடுப்பது என்று எனக்கு தெரியும் என முத்து நம்பிக்கை கொடுக்கின்றார். அதன் பின்பு மீனாவை உள்ளே போகுமாறு சொல்ல, விஜயா அவளை வீட்டை விட்டுப் வெளியே போகுமாறு திட்டுகின்றார்.

எனினும் தப்பு செய்தது சத்யா தானே மீனா என்ன செய்வார் என்று கேட்க, அது எனக்குத் தெரியாது மீனா இந்த வீட்டில் இருந்தால் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்கின்றார். இதற்கு அண்ணாமலை, மீனா இந்த வீட்டு பொண்ணு அவள் இங்கு தான் இருப்பார் என்று சொல்ல, உடனே விஜயா தனது உடைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போகிறார்.

இதையடுத்து பார்வதி வீட்டுக்குச் சென்ற விஜயாவுக்கு மீனாவின் குணத்தை பற்றி எடுத்து சொல்லுகின்றார் பார்வதி. மேலும் தன்னை தனது மருமகள் மகனிடம் இருந்து பிரித்து விட்டார் அதுபோலவே ரோகினியும் ஸ்ருதியும் ஒரு நாள் உன்னை மகன்களிடமிருந்து பிரித்து விடுவார்கள். ஆனால் மீனா அப்படி இல்லை என்று சொல்ல, விஜயா யோசிக்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement