• Dec 26 2024

ரோகிணி கிளப்பிய புதுப் பிரச்சினை.. ஆடிப்போன வித்யா! விஜயா பார்த்த கண்கொள்ளா காட்சி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், வித்யா ஒரு இடத்தில் காத்திருக்க, அங்கு ரோகினி மனோஜ் ஆட்டோவில் வந்து இறங்குகிறார்கள். அங்கு சென்றதும் வித்யா வேலைக்கு போகாமலே அப்பா ஆயிட்டீங்க என மனோஜை கலாய்க்கிறார்.

அதன்பிறகு மனோஜ் ரோகிணியை தனியாக அழைத்து கன்ஃபார்மா எனக்  கேட்க, டாக்டர் கிட்ட போனால் தான் தெரியும். ஒருவேளை கன்ஃபார்ம் என்று சொல்லிவிட்டார்கள் என்றால் என்ன பண்றது ,  கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம் என்று தானே பிளான் போட்டோம். இப்போதைக்கு  குழந்தை  வேணாம் என்பது போல சொல்ல, ரோகிணி கோவப்படுகிறார்.

மேலும், மனோஜிடம் பணத்தை கொடுத்து கம்பனி இன்டர்வியூ ஒன்றுக்கு அனுப்பி வைத்துவிட்டு, நான் வித்யாவுடன் செக்கப் பண்ண போகிறேன் என மனோஜை அனுப்பி வைக்கிறார்.  

இதை தொடர்ந்து நான் கர்ப்பம் இல்லை இப்போதைக்கு தப்பிக்கிறதுக்கு பொய் சொன்னேன் என வித்யாவிடம் உண்மையை உடைக்கிறார் ரோகிணி.


மறுபக்கம் ரோகிணி கர்ப்பம் என்ற சந்தோஷத்தில் விஜயா அங்கும் இங்கு  உலாத்திக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை டாக்டர் கன்ஃபார்ம் பண்ணட்டும் அதுக்கப்புறம் பேசிக்கலாம் என கூறுகிறார்.

அங்கு பார்வதி மாங்காவோடு வர விஜயா, சந்தோஷத்தில் மாங்காவை எடுத்து வைக்குமாறு மீனாவை கூப்பிடுகிறார். அந்த நேரத்தில் மாங்காய் எல்லாம் கீழே கொட்டி விட, அதில் கால் வைத்த மீனா வழுக்கி கொண்டு நேரா செல்ல, அங்கு முத்து அவரை தாங்கிப் பிடிக்கிறார். இதை பார்த்து விஜயா காண்டாகிறார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த ரோகிணியிடம் டாக்டர் என்ன சொன்னாங்க கன்ஃபார்ம் தானே? என விஜயா கேட்க, ரோகிணி டல்லாகவே கன்பார்ம் இல்லை என்று உண்மையை உடைக்கிறார். இதனால் விஜயா ஏமாற்றம் அடைகிறார். ஆனால் மனோஜ் சிரித்துக் கொண்டே சந்தோஷமாக நிற்கிறார்.

மீனாவும் நான் கூட ரொம்ப சந்தோஷமா எதிர்பார்த்து இருந்தேன் சீக்கிரம் நல்லதே நடக்கும் என்று சொல்ல, நீ என்ன வேண்டி இருப்பானு எனக்கு தெரியும் என விஜயா கோபப்படுகிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை அவசரப்பட்டு எல்லாத்தையும் பேசாத என திட்டுகிறார்.

அதன்பிறகு ரூமுக்கு வந்த விஜயா எனக்கு ரோகிணி கர்ப்பம் ஆகாது கூட பிரச்சனை இல்ல ஆனா முதல்ல மீனா கர்ப்பம் ஆக கூடாது என நினைக்கிறார். மேலும், ஸ்ருதி கர்ப்பமான கூட பரவால ஆனா அவ அம்மா வீட்டுல இருக்காளே. இப்படியே விட்டா இடைவெளி பெருசாயிடும் என்று ஸ்ருதிக்கு போன் பண்ணுகிறார்.

அதில், உன் ஞாபகமாகவே இருக்குது. ரவி நினைப்பும் எனக்கு அதிகமாக இருக்கு என்று சொல்ல, ஸ்ருதி பங்க்ஷனில் எடுத்த போட்டோவை அனுப்பி வைத்து அதை பார்த்துக்கோங்க என சொல்கிறார். மேலும்,  முத்து செய்தது தப்பு. அவன் ஒரு முரடன் நீ பெருசா எடுக்காத வீட்டுக்கு வாமா என கூப்பிட,  என் அப்பாவை அடிச்சவன் இருக்கிற வீட்டுக்கு என்னால வர முடியாது என்று சொல்லி போனை வைத்து விடுகிறார் ஸ்ருதி. இது தான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement