• Apr 07 2026

2026 தேர்தலை முன்னிட்டு விஜய் நடித்த அரசியல் படம் ரீ-ரிலீஸ்.. எந்த படம் தெரியுமா?

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களைத் தொடர்ந்து வெளியான சர்க்கார் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி 7 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

விஜய் நடித்த படங்களிலேயே சர்க்கார் திரைப்படம் அவருடைய கரியரில் முக்கியமானதாக காணப்பட்டது. வசூல் ரீதியாகவும் அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அரசியல் வசனங்கள் நிறைந்து காணப்பட்டது.

மேலும் சர்க்கார் படத்தில் பொதுமக்களின் பிரச்சினைகள், அரசியல் கட்சி மாநாடு, தேர்தல் நேரத்தில் நடந்த எதிர்பாராத திருப்பங்கள், கள்ள ஓட்டு பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஓட்டு உரிமை போன்றவை அந்த படத்தை பரபரப்பாக எடுத்துக்காட்டியது.


மேலும் அந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தது. விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ள நிலையில் இந்த படம் ரசிகர்களால் தேடிப் பார்க்கப்பட்டது. அதனை ஓடிடி தளங்களிலும் அதிகளவானோர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கதைக்களம் கொண்ட சர்க்கார் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

இதனால் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் முதன்முறையாக களமிறங்குவதால், ஓட்டு உரிமை மற்றும் அரசியல் மாற்றத்தை பேசும் சர்க்கார் படம் மீண்டும் திரையிடப்படுவது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement