• May 23 2026

திமு‌க, அதிமுகவை ஓரம் கட்டிய விஜய்.. இணையத்தை அதிரவிடும் வெங்கட் பிரபுவின் பதிவு!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தற்பொழுது வரை வெளியாகியுள்ள நிலவரப்படி தவெக 104 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 73 இடங்களிலும், திராவிட முன்னேற்ற கழகம் 52 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இந்த முன்னிலை நிலவரம் காரணமாக நடிகர் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பல இடங்களில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமூக வலைத்தளங்களில் விஜய் ஆதரவாளர்கள் தொடர்ந்து பதிவுகள், மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து இயக்கிய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை குறிக்கும் வகையில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற கேப்ஷனுடன் விஜய்யின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement