தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே தோன்றும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள அவரது புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஒரு Get Together விருந்தில், தன்னுடன் இணைந்து பணியாற்றிய முக்கிய இயக்குநர்களுடன் நடிகர் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சந்திப்பில், இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், AL விஜய், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் அஜித்துடன் வெவ்வேறு காலகட்டங்களில் வெற்றிப் படங்களை வழங்கிய இந்த இயக்குநர்கள் ஒரே இடத்தில் கூடியது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
வைரலாகி வரும் புகைப்படங்களில், நடிகர் அஜித் எப்போதும் போல எளிமையான உடை அணிந்து, இயல்பான புன்னகையுடன் காணப்படுகிறார்.
Listen News!