பிக்போஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது இந்த வாரம் எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர்.வெளியில் இருந்து வந்த இவர்கள் பல சுவாரஸ்யமான விடயங்களை பேசி நிகழ்ச்சியை இன்னும் விறு விறுப்பாகியுள்ளார்.
இன்றைய நாளுக்கான இறுதி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.இதில் உள்ளே வந்த விஜய் சேதுபதியின் செல்ல பொண்ணு சாச்சனா விஷாலினை கண்கலங்க வைத்து சென்றுள்ளார்.விஷாலை பார்த்து இவர் "நீ அன்ஷிதா,தர்ஷிகா இவங்க இரண்டு பேர் கூடயும் நீ பழகியது எனக்கு வெளிய பாக்கும் போது தப்பா தான் இருந்திச்சு நீ ரெண்டு பேரையும் லவ் பண்ணி தான் இருக்க நீ ஒரு பிளே பாய்;விஷால் வந்து தப்பா வெளியில தெரியிறான் அவ்வளவு தான் "என விஷாலை தனியாக அழைத்து அதிரடியாக சொல்லி வெளியேறியுள்ளார்.
இதை கேட்ட விஷால் மிகவும் மனமுடைந்து அழுது படுத்திருந்த போது முத்து ,ஜாக்குலின், ராயன் ஆகியோர் ஆறுதல் கூறியுள்ளதுடன் குறிப்பாக முத்து "நாங்க இந்த வீட்ல அதிக விமர்சனங்களை சந்திச்சிருக்கம் விஷால் அதுக்கு நூறு சதவீதம் நம்ம தான் பொறுப்பு "என கூறியுள்ளார்.
Listen News!