• Jan 27 2025

இளையராஜாவை மரியாதையை குறைவாக பேசியவர்கள் மீது கோபம் கொண்ட விஷால்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பத்மபூஷன் விருது வாங்கியமைக்கு நடிகை சோபானாவிற்கும் நடிகர் அஜித்குமாருக்கும்  நடிகர் விஷால் வாழ்த்தியமை தொடர்பாக ஊடகங்கள் முன் கருத்து தெரிவித்துள்ளார்.


அவர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நடிகர்சங்கம் சார்பாகவும் ஒரு சினிமா நடிகனாகவும் இவர்கள் பத்மபூஷன் விருது வாங்கியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.இதை நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதுடன் பெருமையாகவும் உள்ளது.

மேலும் அஜித் குமார் வெளியூரில் இருப்பதால் அவருக்கான வாழ்த்தை கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளேன்.அதேபோல் மேடை நாகரிகம் இல்லாமல் ஒருவர் இளையராஜா பற்றி பேசியது குறித்து விஷால் கண்டித்து பேசியுள்ளார். 


"அவருக்கு அதே வேலையா போச்சு.ஒவ்வொரு தடவையும் கதைச்சிட்டு மன்னிப்பு கேக்குறதுதான் வேலை"என்றார்.அத்துடன் நீங்க யார வேணும் எண்டாலும் திட்டுங்க மற்றும் கெட்ட வார்த்தை கூட பேசுங்க.பேசிட்டு இறுதியில் மன்னிப்பு கேட்டாலும் அவை சமூக வலைத்தளங்களில்  தவறாகவே வெளியாகும் என்றார்.இதன் போது மேடையில் பேசுவதற்கு என நாகரிகம் உள்ளது.அது தெரியாமல் கதைப்பவர்களை மாற்ற முடியாது என்றார் விஷால்.

யாருக்குமே இளைய ராஜா sir ஐஅவன்,இவன் என தவறாக கதைக்க உரிமை இல்லை எனவும் கூறியுள்ள விஷால் இளையராஜாவை "கடவுளின் குழந்தை" எனவும் குறிப்பிட்டு இருந்தார்.அவரது பாடல்கள் கேட்பதன் மூலமாக பலரும் depression இல்லாமலும் சந்தோசமாகவும் வாழமுடியும் என்றதுடன் ஒவ்வொரு மக்களதும் ரத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.அதேபோல் அவருடைய பாடல்களால் எத்தனையோ இயக்குநர்களின் படம் வெற்றி அடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.மணிரத்தினம்,R.k.செல்வன் போன்ற பல இயக்குநர்களை குறிப்பிடத்தக்கது.


இளையராஜா மிகப்பெரும் சாதனை படைத்த ஒருவர் அவரை அவன் என்று யாரும் கதைக்க  கூடாது என்றும் தெரிவித்ததுடன் மன்னிப்பு கேட்டாலும் அவர் கதைத்தது தப்பு என்றார் விஷால்.மேலும் அவர் பேசியதை கேட்டு அதற்கு கை தட்டியவர்கள் மீது வருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.தெருக்கூத்தில் இருந்து தான் நாங்களும் நடிக்க வந்தோம் எங்களுக்கு கெட்ட வார்த்தை பேசதெரியாது என்றார்.


Advertisement

Advertisement