• Dec 26 2024

எனக்கும் ரெட் ஜெயந்த்க்கும் பிரச்சனதான் ஓபனாக கூறும் விஷால்! காரணம் உதயநிதிக்கு...

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

நடிப்புக்காக உடலையே வதைத்து நடிக்கும் நடிகர்கள் என்றால் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஒரு சிலரை கூற முடியும். அவ்வாறான சிறந்த நடிகராக இருப்பவர் விஷால் ஆவார். இவர் சமீபத்தில் அரசியலுக்கு வரப்போவதாக கூறிய நிலையில் இன்டெர்வியு ஒன்றில் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறி உள்ளார்.


நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி சினிமா துறைக்குள் வந்த இவர் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் இவர் பிரபல யூடியூப் தளம் ஒன்றில் இன்டெர்வியு கொடுத்துள்ளார்.


விஜய் அரசியழுக்கு வந்ததை தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நானும் போட்டியிடுவேன் என கூறியுள்ளார் நடிகர் விஷால். இதனை தொடர்ந்து நடந்த இன்டெர்வியு ஒன்றில் " உங்களுக்கும் ரெட்ஜெயண்ட்டுக்கும் பிரச்சனையா? என கேட்டபோது "ஆம் எனக்கும் அவர்களுக்கும் பிரச்சனை என்னை இந்த தேதியில் தான் படம் ரிலீஸ் செய்ய வேண்டும் என கூறுவதற்கு அவர்கள் யார்? என ஆவேசமாக பேசியுள்ளார் விஷால். மற்றும் அவர் குறித்த பிரசனை உதய நிதிக்கு தெரியுமா என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement