• Dec 26 2024

கீர்த்தி சுரேஷுக்கு தூண்டில் போட்ட விஷால் குடும்பம்.! இறுதியில் நடந்த மாற்றம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான ரஜினி முருகன் படத்தில் உன் மேல ஒரு கண்ணு என்ற பாடலின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தனது பின்னால் சுற்ற வைத்த ஒரே ஒரு நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பிலும் காமெடியிலும் ரொமான்ஸ் சீன்லும் நடித்து தன்னுடைய அழகை மெருக்கூட்டி கொண்டே போகின்றார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக ரகு தாத்தா திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கீர்த்தி சுரேஷ் தொடர்பில் பல வதந்திகள் வெளியானவாறே உள்ளது. பைரவா படத்தில் நடித்த பிறகு விஜய்க்கும் கீர்த்தி சுரேஷ்சுக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக பல வதந்திகள் பரவியது.

அதிலும் விஜயின் நண்பரான சஞ்சீவ் வீட்டின் மாடியில் கீர்த்தி தங்கி இருப்பதற்கு காரணம் விஜய் தான் என்று பல  வதந்திகள் வதந்திகள் பரவின. ஆனால் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலனை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.


இதை தொடர்ந்து கூடிய விரைவிலேயே சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சண்டக்கோழி 2 படபிடிப்பின் போது கீர்த்தி சுரேஷை பார்த்த விஷாலின் பெற்றோர் அவரை விஷாலுக்கு திருமணம் செய்வது தொடர்பில் லிங்குசாமியிடம் பேசி உள்ளார்களாம். 

லிங்குசாமி கீர்த்தி சுரேஷிடம் சொல்ல தான் ஏற்கனவே ஒருவரை காதலிப்பதாக சொல்லி அவர் மறுத்துள்ளார். இதனை சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என  தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement